Thursday, June 10, 2010
இறகுகள்
எப்படியேனும் கண்ணில் பட்டுவிடும்
தினம்தோறும் ஏதேனும்
பறவையின் இறகொன்று
வெண்ணிறத்தில் சில இறகுகள்
வெண்மையும், கருமையும்
கலந்த நிறத்தில் சில இறகுகள்
எந்த பறவை
என்ன சொல்ல விழைகிறது
என்று புரியாமலே
சேகரித்து வைத்திருந்தேன்
இறகுகள் அனைத்தையும்.
வெறுமை தகித்த
ஓர் இருண்ட நாளில்
இறகுகள் அனைத்திலும்
வர்ணம் தீட்டி
இயல்பு மாற்றிய வேளையில்
அறை முழுவதும் பரவி
மின்னுகிறது
உதிர்த்து சென்ற
பறவைகளின் ஸ்நேகப் புன்னகை.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//அறை முழுவதும் பரவி
மின்னுகிறது
உதிர்த்து சென்ற
பறவைகளின் ஸ்நேகப் புன்னகை.///
excellent geetha
மனவெளியில் உங்கள் இறகுகள்
சுழன்று சுழன்று நடனமிடுகிறது.
நன்றி LK, மதுமிதா :)
நல்லாருக்குங்க.
புகைபடமும் கவிதையும் ரம்யம்...
கவிதை நன்று.
மிகவும் நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்...
ம்,நல்லா இருக்கு.
Post a Comment