வீடற்ற சிறுமியவள்
வீதியில் உறங்குபவள்
இரைச்சலற்ற இரவு
ஒரு பொழுதும் அறியாதவள்
இருத்தல் தொலைத்த இரவொன்றில்
கடற்கரை மணலில் முகம்
பதித்து கண்ணயர்ந்தாள்
கலங்கிய நிலவது
தன் அடர் வெளிச்சத்தில்
அவளுக்கான பாதையமைத்து பார்த்திருந்தது
எதிர்பட்ட ஒளிக்கதிர்களில்
சிறு கால்கள் பதித்து
நிலவின் மடியைச் சென்றடைந்தாள்
நட்சத்திரங்களின் சிரிப்புகளுக்கிடையே
தேவதைகளின் தாலாட்டில்
நிர்மல துயில் கொள்கிறாள்
அமைதியொன்று தவழ்கிறது
பிரபஞ்சம் முழுவதும்.
.
6 comments:
கவிதைகள் எல்லாம் வாசிச்சேன் கீதா.(படித்ததில் பிடித்தது கூட)
நல்ல flow. ரொம்ப நல்லாருக்குங்க.
கற்பனையை ஊற்றிவிட்டீர்கள்...வீடற்ற சிறுமியும் நிலவின் அரவணைப்பில்... மிக நன்று...
அனாதை என்று இங்கு
எவருமில்லை என்பதை
உங்கள் கவிதை
வழிமொழிகிறது.
நன்று.
வீடிழந்த சிறுமியின் நிலவு உறக்கம்...
ரொம்ப நல்லா இருக்குங்க...
படமும் மிக பொருத்தம்...
வாழ்த்துக்கள் தோழி..
தொடருங்கள்...
நன்றி LK.
ராஜாராம் அவர்களின் வருகைக்கும்,வாசிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றி.
நன்றி ராசராசசோழன், மதுமிதா.
நன்றி கமலேஷ்.
இரக்கமுள்ள கவிதை.
பாராட்டுக்கள்.
Post a Comment