Saturday, June 26, 2010

கூடு



                                                  

                                கூரையை பிய்த்துக்  கொண்டிருக்கிறது சிரமத்துடன்
                                சுள்ளிகள் சிதறிக்கிடக்கிறது
                                எதையேனும் கவ்வியபடியே பறந்து செல்கிறது
                                அந்த கிளை நோக்கி.
                                இடையில் சில நாட்கள்
                                காணாமல் போனது.
                                வெண்ணிற இரவொன்றில் விருட்சத்தில்
                                புதிய உயிர்களின் சத்தம் துவங்குகிறது.
                                அப்பறவையின் சிறகடிப்பு இப்பொழுது
                                அதிகரித்து தெரிகிறது.
                                கனியோ இலையோ வாய் குவிந்து
                                கவ்விச் செல்கிறது குஞ்சுகள் நோக்கி.
                                இலைகளின் சட்டென்ற சலசலப்பில்
                                மிரண்டு போகிறது அதன் கண்கள்.
                                முற்றத்தில் பறந்து திரியும்போது
                                லேசான சிறு தூரலில்
                                விரைந்தோடிவிடுகிறது விருப்பமுள்ள
                                கூடது கலையாதிருக்க.
                                கூடென்பது அற்புதமென்று
                                சொல்லிப் போகிறது நித்தமும்
                                என் வாசல் கடக்கும் பறவையொன்று.


.

4 comments:

AkashSankar said...

நல்ல கவிதை...

Madumitha said...

கூடோ வீடோ
அவரவர்
கூடு(வீடு)
சுகம்தான்.

பத்மா said...

எங்கள் வீட்டிலும் இப்போது இரண்டு பறவை குடும்பம்
பார்ப்பதே fascinating ஆ .
அழகா இருக்குங்க கவிதை கீதா

vinu said...

oru sila maathangalukku mun en veetil kudi irruntha thookkanaang kuriviyin sathathai ninaivupaduthiyathu.


nandri

Post a Comment