சமீபத்தில் படித்தவையில், வெகுவாய் கவர்ந்த கவிதை ஒன்று "பறவையின் உருவச் சித்திரம்", மிக அழகான கற்பனை உணர்வை நெகிழ்ந்து ரசிக்கமுடிகிறது இக்கவிதையில். பகிர்கிறேன்.
பறவையின் உருவச் சித்திரம்
முதலில் ஒரு கூண்டின் சித்திரம் தீட்டு
திறந்த கதவுடன்
பின்னர் தீட்ட வேண்டியது
கவர்ச்சியாக ஏதாவது
எளிமையாக ஏதாவது
அழகாக ஏதாவது
பயனுள்ள ஏதாவது
பறவைக்காகத்தான்
பிறகு சித்திரம் வரைந்த சீலைத் துணிச்சட்டத்தை
ஒரு மரத்தின் மேல் சாய்த்து வை
ஒரு பூங்காவிலோ
ஒரு தோப்பிலோ
அல்லது ஒரு காட்டிலோ
மரத்தின் பின்னல் ஒளிந்துகொள்
ஒன்றும் பேசாமல்
அசையாமல்... ...
சிலவேளை பறவை சீக்கிரம் வந்துவிடலாம்
ஆனால் அந்த முடிவுக்கு வருவதற்குப்
பல வருடங்களை எடுத்துக்கொள்ளவும்
செய்யலாம்
நம்பிக்கை இழக்கக் கூடாது பொறுத்திரு
தேவையானால் வருடக் கணக்கில்
பொறுத்திரு
பறவையின் வருகையின் விரைவு அல்லது
தாமதத்திற்கும்
சித்திரத்தின் வெற்றிக்கும்
எவ்விதத் தொடர்புமில்லை
பறவை வரும்போது
அது வருவதாக இருந்தால்
மிக ஆழ்ந்த மௌனம் காட்டு
கூண்டில் பறவை நுழையும்வரை காத்திரு
நுழைந்தவுடன்
தூரிகையால் கதவை மென்மையாகச் சாத்திக்
கூண்டுக் கம்பிகள் அனைத்தையும்
ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிடு
பறவையின் இறகுகள் எதன்மீதும்
படாமல் இருக்கக் கவனம்கொள்
பின்னர் மரத்தைச் சித்திரமாகத் தீட்டு
அதன் கிளைகளிலேயே மிக அழகான ஒன்றைத்
தேர்ந்தெடு
பறவைக்காகத்தான்
பிறகு பசும் தழைக் கொத்துகளையும்
காற்றின் புத்துணர்ச்சியையும்
சூரிய ஒளித்தூசியையும்
கோடை வெப்பத்தில் புற்களிடையே
பூச்சிகள் எழுப்பும் ஓசையையும்
வண்ணமாகத் தீட்டு
பிறகு பறவை பாட விழையும்வரை
காத்திரு
பறவை பாடவில்லையென்றால்
அது மோசமான அறிகுறி
சித்திரம் மோசம் எனும் அறிகுறி
ஆனால் அது பாடினால் நல்ல அறிகுறி
உன்னை நீ அறிவித்துக்கொள்ளலாம்
என்னும் அறிகுறி
பிறகு பறவையின் இறகுகளில் ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
சித்திரத்தின் ஒரு மூலையில்
எழுது உன் பெயரை.
- மொழிபெயர்ப்பு - வெ.ஸ்ரீராம்.
இக்கவிதை இடம் பெற்ற நூல் "சொற்கள்", எழுதியவர் "ழாக் ப்ரேவெர்",
கற்பனை நிலை கவிதைகளும், யதார்த்த மக்கள் நிலை கவிதைகளும் நிறைந்து கவர்கிறது புத்தகம் முழுவதும். மழைச் சாரலின் மென் துளிகளும், அன்றாட வாழ்வின் அயர்ச்சியின் வேர்வையையும் இயல்பு நிலையில் நின்று உணரவைக்கிறது ஒவ்வொரு கவிதையும்.
ழாக் ப்ரேவெர், இரண்டாம் உலகப் போர் சூழலில் வாழ்ந்த மகத்தான கவிஞர், பல அருமையான படைப்புகளை உலகிற்கு பரிசளித்தவர். "வாழ்க்கை என்பதற்கு மிகவும் உண்மையான, மிகவும் பயனுள்ள கலைசொற்களில் ஒன்று கவிதை" என்ற அழகான உண்மை வரிகளுக்கு சொந்தக்காரர் ழாக் ப்ரேவெர்.
"சொற்கள்" ஒரு நல்ல வாசிப்பனுபவம்.
.
Sunday, May 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அற்புதம். பகிர்விற்கு நன்றி கீதா. மிக நல்ல பதிவு இது.
உங்களின் சிபார்சுக்கு மிக்க நன்றி.
ஏங்க..கருத்து நல்லா இருக்கு ஆனால் கவிதையா இருக்கா என்ன?
என்னவோ போங்க..நர்சிம் வேற நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு..அவரு குறிப்பிட்டுக் காமிச்சிருக்காரேன்னு உடனடி படிக்க வந்தேன்..
நீங்க கோவிச்சுக்க மாட்டிங்கன்னு நம்பறேன்..
நன்றி..
அறிவன்,
புதுக்கவிதைக்கு மூலவரான போதலேர் ஒரு பிரெஞ்சுக்காரர். 'அலங்காரமில்லாத சந்தை மொழியில் எழுதப்பட வேண்டும் கவிதை' என்பது அவர் வகுத்த இலக்கணம். ழாக் ப்ரெவேர் நம் கண்ணதாசன் அளவுக்கு அங்கே புகழ்பெற்ற கவிஞர். ஆனால் புதுக் கவிஞர். சினிமாவோடும் சம்பந்தப் பட்டவர். (இதே 'பறவை - மரம்' ஐடியாவில் தமிழில் ஒரு பதிவர் ஒரு கவிதை எழுதி அவரது புத்தகத்தின் அட்டையிலும் அக் கவிதை இடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பெற்றது. அதைப் பாராட்டி எழுதிய ஒரு பதிவுக்கு இதே கவிதையின் ஆங்கிலப் பெயர்ப்பை நான் பின்னூட்டம் இட்டிருந்தேன்).
ழாக் ப்ரெவேர் எழுத்தில் ஒரே மாதிரியான ஒலிகள் திரும்பத் திரும்ப வரும், அது ஒரு அழகு:
Déjeuner du matin
-----------------
Il a mis le café
Dans la tasse
Il a mis le lait
Dans la tasse de café
Il a mis le sucre
Dans le café au lait
Avec la petite cuiller
Il a tourné
Il a bu le café au lait
Et il a reposé la tasse
Sans me parler
Il a allumé
Une cigarette
Il a fait des ronds
Avec la fumée
Il a mis les cendres
Dans le cendrier
Sans me parler
Sans me regarder
Il s'est levé
Il a mis
Son chapeau sur sa tête
Il a mis son manteau de pluie
Parce qu'il pleuvait
Et il est parti
Sous la pluie
Sans une parole
Sans me regarder
Et moi j'ai pris
Ma tête dans ma main
Et j'ai pleuré
இதன் ஆங்கிலம்:
Breakfast
---------
He poured the coffee
Into the cup
He poured the milk
Into the cup of coffee
He added the sugar
To the coffee and milk
He stirred it
With a teaspoon
He drank the coffee
And put back the cup
Without speaking to me
He lit a cigarette
He blew some rings
With the smoke
He flicked the ashes
Into the ashtray
Without speaking to me
Without looking at me
He got up
He put his hat
On his head
He put on
His raincoat
Because it was raining
He went out
Into the rain
Without a word
Without looking at me
And I
I took my head
In my hands
And I wept
அனைவரின் வருகைக்கும் நன்றி.
அறிவன்,
படைப்புகளும், ரசனைகளும் பல விதம். இது ஒரு விதம் :)
lovely poem, thanks geetha for sharing and thanks to narsim for the link
Post a Comment