Friday, April 30, 2010
அடர் காடு
அது ஒரு அடர்ந்த
காடு போல் தெரிகிறது
வெண்ணிறப் பூக்களின்
மொட்டவிழ்ப்பு வசீகரிக்கிறது
நீரோடையும் அதனருகில்
யானை கூட்டங்களும் தெரிகிறது
முட்களும் புதர்களும் உதிர்ந்த
இலைகளால் மறைந்திருக்கிறது
கரும்பச்சை நிற இலைகள் கொண்ட
மரங்கள் மிரட்சியுடன் நிற்கிறது
இளைப்பாறும் புலிகள்
இரண்டும் தெரிகிறது
மரக்கிளை ஒன்றில்
சத்தமின்றி படர்கிறது
பழுப்பு நிற மலைப்பாம்பு
கலையக்கூடும் பறவைக் கூடு
ஏதும் உள்ளதா என்றஞ்சி
கிளைகளில் கண் தேடும் நேரத்தில்
கலைந்து நகர்கிறது
இதுவரை
கண்டிருந்த மேகமொன்று.
.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லதொரு வாசிப்பனுவம்.
//இளைப்பாறும் புலிகள்
இரண்டும் தெரிகிறது //
இவ்வரிகள் மட்டும் தொக்கி நிற்பதாக தோன்றுகிறது.மெருகூட்ட மற்றுமோர் வார்த்தை சேர்க்கலாம். வாழ்த்துகள்.
நல்ல கவிதைங்க
நன்றி நிலாரசிகன்.
நன்றி நர்சிம்.
காடு ரொம்பப் பிடிச்சது, இந்தக் கவிதையும் காட்டைக் காட்டுகிறது. மரங்கள் ஏன் மிரட்சியோடு நிற்கணும்? யாரேனும் வெட்ட வந்துட்டாங்களோ?:(
தொடர
Post a Comment