Tuesday, April 20, 2010
இடைவெளி
நிசப்தம் மட்டுமே
படர்ந்திருந்த முன் அறை.
பகிர ஏதுமற்று
விழித்திருந்த மௌனங்கள்.
விலகும் உறவை
புரியவைத்த உணர்வலைகள்.
ஈரம் உலர்ந்த கணங்கள்
வழிகிறது வீடெங்கும்
இருப்பினும் . . .
முற்றத்தில் சிதறும்
மழலையின் சிரிப்பில்
மிச்சமிருக்கிறது
இறுக்கம் அவிழும் தருணமொன்று.
.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான கவிதை.
கவிதையின் கடைசியில் மட்டும் புள்ளி வைத்தால்போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டு கவிதைகளும் அருமை.
பொன்.வாசுதேவன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
நன்றி நிலா :)
Post a Comment