Thursday, May 20, 2010

சிட்டுக் குருவி



                                             
                               
                                              மெல்லிய  மேனியில்
                                              வெண்ணிற  சிறகுகள்
                                              அடர்ந்து  விரிந்திருக்கிறது
                                              மென்சிவப்பு  வாயினில்
                                              அழகுற  கவ்வியபடி
                                              இலையொன்றும்  பூவொன்றும்
                                              சிறுமணி கண்கள்
                                              இரண்டிலும்  ஒளிமின்னும்
                                              மௌன  புன்னகை
                                              ஓவியப்  பறவை  ஒன்றில்
                                              ஆழ்ந்து   திளைத்து
                                              விரல்கொண்டு வருட
                                              முற்படும் பொழுது ...
                                              தோல் தட்டிச் செல்கிறது
                                              சிட்டுக் குருவியொன்று
                                              கொஞ்சம் சிறகடித்து
                                              என்னை பரிகசித்து.

 ....  

8 comments:

நர்சிம் said...

நல்ல அவதனிப்புங்க

எல் கே said...

//மென்சிவப்பு வாயினில்
அழகுற கவ்வியபடி
இலையொன்றும் பூவொன்றும்
சிறுமணி கண்கள்
இரண்டிலும் ஒளிமின்னும்
மௌன புன்னகை///

அருமை . தொடர்ந்து எழுதுங்கள் . ஏன் எந்த திரட்டியுலும் இணைக்க வில்லை ??

Kousalya Raj said...

கவிதை நல்லா இருக்கிறது . நண்பர் LK சொன்னமாதிரி ஏதாவது திரட்டியில் இணைக்கலாமே.

மங்குனி அமைச்சர் said...

அழகா இதமா சொல்லிருக்கிங்க

ஸ்ரீராம். said...

அழகிய கவிதை.LK தளம் பார்த்து வந்தேன்.

பனித்துளி சங்கர் said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு குருவி... அழகு கவிதை... சூப்பர்

Geetha said...

அனைவருக்கும் நன்றி.

Post a Comment