Friday, September 10, 2010
பிரதிபிம்பம்
ஐந்து நிமிட
அதிகாலை கனவில்
கொட்டியது கொடுக்குகள் நீண்ட
கருந்தேலொன்று.
வலி தெறித்த
பொழுதாகவே கழிந்தது
விடிந்த நாள் முழுவதும்.
பரிதியின் கதிர்கள்
சுட்டெரித்த அவ்வரங்கத்தில்
பேச்சுகள் நயமற்று ஒலித்தது
எள்ளல் பூசி பூரித்திருந்தது.
தலை சேர அனுமதியாமல்
மறுத்தளித்து நகர்ந்து வந்த
நேரம் வானில் அஸ்தமனம்.
நிறை நிலா கண் பார்த்து
ஜன்னல் பூத்தொட்டு
நாள் முடித்தும்
கனவில் குரைத்துகொண்டேயிருந்தது
அன்றைய இரவில்
நாய்கள் இரண்டு.
.
Thursday, September 2, 2010
ஒரு துளி
இலையில் விழுந்து
காம்பில் வடிந்து
பூவில் பட்டு
மீண்டுமொரு
இலைத் தொட்டு
பூமி சேர்ந்தது
கொட்டி தீர்த்த
மழையின் ஒரு துளி
அவ்வளவு அழகாக !
.
Friday, August 27, 2010
பூக்களம்
ஓணம்
பண்டிகையின் பெயரைச் சொல்லி,
பூக்களோடு சிரித்து மகிழ ஒரு தருணம் .
.
.
.
.
ஓணத் திருநாள் கொண்டாட்டமன்று ,
பூக்களமிட்டு புன்னகித்த பொழுதில் நினைவாக்கிய புகைப்படம் :)
.
.
.
.
.
.
.
Subscribe to:
Posts (Atom)

