Friday, September 10, 2010
பிரதிபிம்பம்
ஐந்து நிமிட
அதிகாலை கனவில்
கொட்டியது கொடுக்குகள் நீண்ட
கருந்தேலொன்று.
வலி தெறித்த
பொழுதாகவே கழிந்தது
விடிந்த நாள் முழுவதும்.
பரிதியின் கதிர்கள்
சுட்டெரித்த அவ்வரங்கத்தில்
பேச்சுகள் நயமற்று ஒலித்தது
எள்ளல் பூசி பூரித்திருந்தது.
தலை சேர அனுமதியாமல்
மறுத்தளித்து நகர்ந்து வந்த
நேரம் வானில் அஸ்தமனம்.
நிறை நிலா கண் பார்த்து
ஜன்னல் பூத்தொட்டு
நாள் முடித்தும்
கனவில் குரைத்துகொண்டேயிருந்தது
அன்றைய இரவில்
நாய்கள் இரண்டு.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அருமையான கவிதை சகோதரி..
எல்லா நாட்களும் இப்படி ஆகா ..
நல்ல இனிமையான கனவுகளும் ,இனிமையான நாட்களும் அமையட்டும்
கனவு நிலை உரைத்த கவிதை நன்று.
அருமை..
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கனதியான தமிழ் வரியில் அழகான வரிகள்
ஒரு கொடுங்கனவின் நீட்சியா...ரொம்ப நல்லா இருக்குங்க..
விட்டு போன பழைய பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன்.
எல்லாமே ரொம்ப நல்லா வந்திருக்கு.
௦- சிப்பிகள் சேகரிக்கும் சிறுமி - அழகான,கவிதையான தலைப்பு.
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
very nice ,not only in content but in presentation too.congratulations
Post a Comment