ஒளி திரிந்த ஒரு பகலில்
மென்சிவப்பும் கருப்பும்
சேர்ந்த கலவையில்
வண்ணத்துபூச்சியின் இறகொன்று
தரையில் கிடைத்து
அறையில் சேர்ந்தது.
கால் பதிக்கும் இடமெங்கும்
கண்டெடுக்க ஆவல் கொண்டு
அலையத் துவங்கியன
ஆசை நிறைத்த விழிகள் இரண்டு.
சாலை இயல்பிழந்த
ஒரு மழை நாளில்
மென்னுடல் சிதைந்து
மெய்யிறகுகள் அறுந்து
சிதறிகிடந்த காட்சி பார்த்த
வானம் வெறித்த வேளையில்
பிடிக்காமல்தான் போனது
தொட்டுவிட இயலாத கைகளும்
தேடி அலைந்திருந்த கண்களும்.
.
11 comments:
அருமை
Thnx LK, romba naalachu ingha parthu...
அழகு.
C L A S S
அழகு.
nallaayirukku..
உதிர்ந்த வண்ணத்துப் பூச்சியின்
இறகிலிருந்து வழிகிறது கண்ணீராய்
ஒரு கவிதை.
முதல் வாசிப்பில் திரை பாடல் போல் இருந்தது ... பின்பு மறுவாசிப்பில் வலிக்க தொடங்கிவிட்டது ...
தேர்ந்தெடுத்த புகைப்படம் கன கச்சிதம் ... வாழ்த்துகள்
வண்ணத்துப்பூச்சியும் நீங்கள் தானே!
இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வண்ணத்துப்பூச்சியும் நீங்கள் தானே!
இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
மண்குதிரை
Post a Comment