Saturday, August 21, 2010

சிப்பிகள் சேகரிக்கும் சிறுமி போலத்தான்...

 
 "பூச்சரம்   போல   முழம்   முழமாக  நீண்டு  கொண்டே  போகும்    இத்தொடர்
பதிவில் நான் முடிய நினைக்கும் மல்லிகைகள்"  என்று  அழைத்திருக்கிறார்
நண்பர்  கமலேஷ்.


ஆகையினால்.... 
                                            


1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

     கீதா


2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
    பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

    கீதாதான்  உண்மையான பெயர்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

    வலையிலும்   கவிதைகளை    தேடியிருக்கிறேன்,    அப்படிதான்    சில
    வலைபூக்களை   கண்டெடுத்தேன்.  அவற்றில்  உலவிக்  கொண்டிருந்த
    பொழுதொன்றில்,    இதுவரை   நோட்டு   புத்தகத்தில்     உறங்கியிருந்த 
    வரிகளை   திரையில்  பார்த்தால்  எப்படியிருக்கும் என்ற  உவகையில்
    பூத்ததுதான்     இனிக்கும்   வரிகள்.     பின்,      வார்த்தைகள்     கொண்டு
    இவ்வெளியில் சிறகடிப்பது   பிடித்தும் போனது.
  

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்
   செய்தீர்கள்?

    இது பிரபலங்களுக்கான கேள்வி  ;)


5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
    கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?
    இல்லை என்றால் ஏன்?

    விஷயம் என்று பகிர்ந்தது இல்லை.  எனினும்,  அசைவித்த நிஜங்கள்,
    கவிதைகளில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது.

    விளைவு,  படித்து சென்றவர்கள் விட்டுச்செல்லும் தடங்கள்,  பகிர்வுகள்.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?
   அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

    பொழுதுகளின் சுவாரசியத்திற்காக.....


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்?
   அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

    இனிகும் வரிகள் மட்டுமே.


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா?
   ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

   சிப்பிகள்  சேகரிக்கும்  சிறுமி  போலத்தான்,   பிடித்த  எழுத்துகளை
   வலையில் தேடி  சேகரித்து  கொண்டிருக்கிறேன் .  வேறு  எண்ணம்
   எதுவும் இயலாததே.


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்?
   அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

    முதல் பின்னூட்டமளித்து கைகுலுக்கியவர்கள்,  நிலாரசிகன் மற்றும் நர்சிம்.


10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய
     வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

     ம்ம்ம்...
     குளுமைக்கு    மகிழ்ச்சியும், 
     வெம்மைக்கு  அயர்ச்சியும்   என 
     எல்லோரும் பழக்கப்படுத்திக்கொண்ட   உலகுதான்  என்னுடையதும் :)


     @கமலேஷ்,  நினைவில்வைத்து  அழைத்தமைக்கு மிக்க நன்றி.

     பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது  நிலாரசிகன்.  


 .  

5 comments:

Madumitha said...

இனிக்கும் வரிகள்.

பத்மா said...

arumai geetha

ராசராசசோழன் said...

உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.... (Not related to the post...before publishing see the preview and remove the hidden characters- ல மு)

"உழவன்" "Uzhavan" said...

நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்

Geetha said...

அனைவரின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி :)

Post a Comment