வாசல் நுழைவில் செழித்து
மென்கிளைகள் படர்ந்து
நிற்கின்றது
சின்னதொரு அரளி மரம்.
அடர் மஞ்சள் நிறத்தில்
பூத்து குலுங்கும்
நாட்களிலெல்லாம்
கடந்து வரும்
தபால்காரரோ
பால்காரரோ
விருந்தாளியோ
யாராயினும்
அனைவரின் முகத்திலும்
லேசாக படர்ந்திருக்கிறது
மொட்டவிழ்ந்து புன்னகைக்கும்
பூக்களின் மலர்ச்சி.
.
11 comments:
refreshin :)
Thanks Karthi :)
Nice one.
ம்,அருமை அருமை..
ரொம்ப பிடிச்சிருக்கு..
Thanks Nila.
Thanks Kamalesh :)
பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிர்கிற்கு உங்களை அழைத்திருக்கிறேன், தோழி.
நேரம் அமையும் தங்களை பற்றி எழுதுங்களேன்.
மு.மேத்தாவின் ''அரளிபூ அழுகிறது'' கவிதையை நினைவுபடுத்துகிறது...நல்லா இருக்கு,,,,
அதில் அழுகை என்றால் இதில் புன்னகை!
Good one!
உண்மைலேயே இனிக்கும் வரிகள்தான் .. இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வருவதாக நினைவு ... முழுவதையும் படிக்க வேண்டும்
வாழ்த்துக்கள் !!
நன்றி விஜய்
நன்றி ப்ரியா
நன்றி ஜெனோவா
:)
Post a Comment