Thursday, July 22, 2010

மொட்டொன்று...

                                      
 
                                      
                                             

                                       ஏதுமற்று நின்றிருந்த மொட்டை மரத்தில்
                                       துளிர்த்து எழுந்துள்ளது ஒரு கோப்பு இலைகள்.
                                       கன்றாய் இருந்த வாழை
                                       பெரு இலைகள் பல  விரித்து
                                       காய்களும் கனிந்தபடி.
                                       சிறகு முறிந்திருந்த கிளியொன்று
                                       வானில் முதல் மகிழ்ச்சியை
                                       தன் நிறத்தை சிதறி அறிவிக்கிறது.
                                       தவறாமல் மண்  வந்து விழுகிறது 
                                       வெம்மை தணிக்கும்
                                       குளிர் மேகத்  துளிகள்.
                                       நிலவின்றி கழிந்திருந்த  இரவு
                                       இன்று பிறையின் மென் அலையில்.
                                       இயல்பாகத்தான் சுழல்கிறது  பிரபஞ்சம்
                                       தடையேதுமின்றி  பெருவெளியில்.
                                       சிறு  வழிப்பாதையில்
                                       மொட்டொன்றை மட்டும்
                                       மலர்விக்க மறந்தபடி.



.

5 comments:

கமலேஷ் said...

//சிறு வழிப்பாதையில்
மொட்டொன்றை மட்டும்
மலர்விக்க மறந்தபடி ///

அருமையா இருக்குங்க..

நிலாரசிகன் said...

ஒரு வித ஏக்கத்தின் வெளிப்பாடாக உணர்கிறேன்.
நன்று.

விஜய் said...

மிக அழகாக இருக்கிறது வரிகள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

ராசராசசோழன் said...

நிலவுக்கு உள்ள களங்கம் போல் உங்கள் கவிதையிலும் ஒரு எழுத்து பிழை ஆனால் இரண்டுமே அழகு தான்...வாழ்த்துக்கள்...

தவராமல் = தவறாமல்

சௌந்தர் said...

நிலவின்றி கழிந்திருந்த இரவு
இன்று பிறையின் மென் அலையில்//

கவிதை அழகு போட்டோ அதை விட அழகு

Post a Comment